Search

Sep 12, 2025

உலகம்

நேபாள சிறையில் தப்பிய கைதிகள் - இந்திய எல்லையில் கைது.

நேபாளத்தில் நிகழும் போராட்டம் மற்றும் பாதுகாப்புப் படையினருடனான ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

நேபாளத்தின் பல்வேறு சிறைகளிலிருந்து தப்பியோடிச் சென்ற 67 கைதிகள் இந்திய - நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளனர்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை இணைக்கும் இந்தியா -நேபாள எல்லையில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளிலிருந்து அனைத்து கைதிகளும் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All