Search

Oct 13, 2025

உலகம்

காரூரில் - பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்கும் த.வெ.க தலைவர் விஜய்.

தமிழ்நாடு - கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

- இவ் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்,

ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டது. நீதித்துறை, பொலிஸ், ஊடகங்களை அணுக முடியவில்லை.

காரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் ஏற்படுமென பொலிஸார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கூடிய விரைவில் தலைவர் விஜய் காரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

என த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All