Search

Sep 8, 2025

உள்ளூர்

கடுமையாக்கப்படும் போக்குவரத்து சட்டங்கள்.

நாட்டில் இன்று (08) முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

- இது குறித்து போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள், கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் பகுதிகளில் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல், சட்டவிரோத மேலதிக உதிரிபாகங்கள்,

மற்றும் அதிகமான சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பில் இன்று முதல் சட்டத்தை கடுமையாக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All