Search

SEGU

Nov 15, 2025

உள்ளூர்

விபத்துக்குளாகியா படகுகள் - உயிர் தப்பிய மீனவர்கள்

காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு படகில் ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையிலையே அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்த அடுத்த படகும் சவுக்கடி கடற்பிரதேசத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு காற்றில் அடித்து சவுக்கடியில் தரை தட்டியது

 

இதன்போது இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் ஒருவருக்கு காலில் பலத்த வலி மற்றும் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு 1.10 மணியளவில் மீட்கப்பட்டதோடு காயமுற்ற படகோட்டி அதிகாலை 1.35 மணியளவில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் போலீசாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே இடத்திற்கு வருகை தந்திருந்த போலீசார் விடயத்தை கேட்டறிந்தனர்.


விபத்திற்கான காரணம் இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என தற்போது வரை அறிய முடிகிறது.




Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All