Search

SEGU

Oct 20, 2025

உலகம்

காசாமீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவின் (Gaza) ரபா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ள இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தரப்பு மீறியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி யஹ்யா அல்-மபூஹ் உட்பட ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகளையும் தடம் புரளச் செய்யும் முயற்சியை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத் அல் - ரிஷ்க் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல் முழுமையான சரிவை நோக்கி கொண்டு செல்வதாக இஸ்ஸாத் அல் - ரிஷ்க் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All