Jino
Sep 23, 2025
உள்ளூர்
X-Press Pearl நிறுவனம் இழப்பீட்டை வழங்க மறுப்பு !
இலங்கை கடற்பரப்பில் 2021ஆம் ஆண்டு தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்துக்கான $1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை வழங்க, அந்த கப்பலின் உரிமையாளர் நிறுவனம் X-Press Feeders மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2021 மே மாதம், சிங்கப்பூரைச் சேர்ந்த MV X-Press Pearl கப்பல், இலங்கை கடற்பரப்பில் பயணிக்கும்போது தீப்பற்றியது. இதனால் பெரும் அளவிலான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் விஷமயமான கழிவுகள் கடலில் கரைந்து, கடல் வாழ் உயிரினங்கள் இறந்து, கரை ஒதுங்கியன.
இந்த சம்பவத்தால் இலங்கையின் கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டது என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All