Search

Sep 27, 2025

உள்ளூர்

ஜனாதிபதி இன்று ஜப்பான் விஜயம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (27) ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.

இவ் விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய பேரரசரைச் சந்திக்கவுள்ளார்.

ஜப்பானிய பிரதமருடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை முன்னிலைப்படுத்தி உச்சிமாநாட்டு சந்திப்பு ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 'எக்ஸ்போ 2025 ஒசாகா' கண்காட்சியிலும் பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All