Search

Sep 17, 2025

உள்ளூர்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் - அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

- இவ் சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பதிவிட்டுள்ளதாவது,

நியாயமான, சமநிலையான வர்த்தகத்தை மேம்படுத்துதல் மற்றும் துறைமுகங்கள் முதல் பொது மக்கள் வரை அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினோம்.

இந்தோ - பசிபிக் பங்காளர்களாக நாங்கள் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தைப் பாதுகாக்கிறோம். பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமான கடல் பாதைகளைப் பாதுகாக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All