Search

Oct 26, 2025

உலகம்

ஆசிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார் ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ஆசிய சுற்றுப்பயணத்தை இன்று (26) ஆரம்பித்துள்ளார். முதல் கட்டமாக மலேசியா சென்றடைந்த அவர், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் அவரை பிரதமர் அன்வர் இப்ராஹிம் வரவேற்றார்.

டொனால்ட் ட்ரம்ப், மலேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும், தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலுக்குப் பிறகு கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் அவரது பயணத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

ஜூலை மாதம் ஐந்து நாள் நீடித்த எல்லை மோதலில் 33 பேர் உயிரிழந்த நிலையில், மலேசியாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

மேலும், ட்ரம்ப் தனது எக்ஸ் கணக்கில், “தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான மாபெரும் அமைதி ஒப்பந்தத்தில் மத்தியஸ்தம் செய்ததில் பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All