Search

Sep 26, 2025

Breaking

#News Alert பேருந்து மீது விழுந்த மரம் - ஒல்கொட் மாவத்தையில் பரபரப்பு ! #Video

கொழும்பு - ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள ரயில்வே தலைமையகத்திற்கு முன்னால் தனியார் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

மேலும், விபத்தினால் கோட்டையிலிருந்து மாளிகாவத்தை வரையிலான பாதை முற்றிலுமாக மூடப்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All