Search

janani

May 8, 2026

Breaking

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை அதிகாரி உயிரிழந்த நிலையில் மீட்பு!

சந்தேகத்திற்குரிய வகையில் மரணமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் ஊழல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All