Search

Aug 20, 2025

உள்ளூர்

தொடரும் தபால் - தொலைத்தொடர்பு ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு.

நாட்டில் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (20) தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

- தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்க தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவிக்கையில்,

அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All