Search

Aug 28, 2025

உள்ளூர்

சட்டம் ஒன்றே ! - ஆனந்த விஜேபால.

பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வரும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதாள உலக கும்பல், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இயங்கு வருகின்றன, அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வறுகின்றனர்.

பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வரும் அரசியல்வாதிகள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளைபேணி வரும் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன,

பாதாள உலக குழுவாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பொலிஸாராக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அனைவரும் சட்டத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றுவோம்.

அதிகாரத்தை பயன்படுத்தி சமூகத்தை வழிநடத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம்." என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All