Search

Aug 27, 2025

உள்ளூர்

இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி சிகரெட் மூட்டைகள் பறிமுதல்.

இந்தியாவின் துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்நிலையில், வேம்பார் சோதனை சாவடியில், மரைன் பொலிஸார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிவேகமாக சென்ற சிறிய லொறியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட் மூட்டைகள் இருந்துள்ளன. ஆறு கோடி இந்திய ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

அந்த வாகனத்தின் சாரதியான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்த 52 வயதானவரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும், சிகரெட் பைக்கட் மூட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடந்த இருந்தது தெரிந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All