Search

Aug 25, 2025

உள்ளூர்

ரணிலின் உடல்நிலையில் திருப்தி - வைத்தியர் பிரதீப் விஜேசிங்க கருத்து.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளாக கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- இது தொடர்பில் ஊடகங்களுக்கு பிரதீப் விஜேசிங்க தெரிவிக்கையில்,

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிறப்பு வைத்தியர்கள் முன்னாள் ஜனாதிபதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், தற்போது அவரது உடல்நிலை திருப்திகரமான நிலையில் இருந்தாலும், திடீரென அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

இருப்பினும், இன்று பிற்பகல் நடைபெறும் வைத்தியர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு, நாளை ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று வைத்தியர் பிரதீப் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All