Search

Sep 11, 2025

உள்ளூர்

ஜனாதிபதி – வர்த்தக சம்மேளன அதிகாரிகள் சந்திப்பு.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்கள், அரச - தனியார் ஒத்துழைப்பு, மற்றும் வர்த்தக சமூகத்துக்கான வசதிகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். சமூக நல்வாழ்வு, சுற்றாடல் நிலைத்தன்மை, மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு முன்னோக்கி நகர வேண்டும். எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகள் குழுவினர், நாட்டின் எதிர்கால வர்த்தக வேலைத்திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All