Search

Oct 1, 2025

உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் நேற்றிரவு (செப்டம்பர் 30) 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் 26 பேர் உயிரிழந்ததுடன், 147 பேர் காயமடைந்துள்ளனர்.

செபுவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர்.

Phivolcs நிறுவனம் சுனாமி அபாயம் இல்லை என அறிவித்தது. இருப்பினும், கடற்கரை பகுதிகளில் சிறிய அலை அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதுகாப்பாக விலக அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All