Search

Sep 9, 2025

உள்ளூர்

மித்தெனிய துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்கள் கைது.

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்த பகுதியில் கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டைக் கொலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டி பகுதியில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 09 மி.மீ அளவிலான கைத் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 53 தோட்டாக்கள், T56 ரக 19 தோட்டாக்கள், T56 ரக வெற்று தோட்டாக்கள், ஒரு ஜோடி கைவிலங்கு, 300 கிராம் ஹெரோயின் என்பனவற்றையும் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All