Oct 23, 2025
உள்ளூர்
சீரற்ற வானிலையால் பல மக்கள் பாதிப்பு.

நாட்டில் தொடர்ந்து நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களில் வசிப்பவர்கள் பலத்த மழை - காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழையினால் சுமார் 480 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், இவ் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் இடம்பெற்ற சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அனர்த்த முகாமைத்துவ நிலையம் பேரிடர் அல்லது வானிலை தொடர்பான அவசர நிலை ஏற்பட்டால் 117 எனும் அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






