Search

Rebecca

Nov 11, 2025

உலகம்

இந்திய தலைநகர் பகுதியில் பலத்த பாதுகாப்பு

இந்திய தலைநகர் புதுடில்லியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பினையடுத்து தலைநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடிய அச்சம் நிலவுவதாக இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அனைத்து பகுதிகளினதும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு பிரிவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக பதிவாகியுள்ளது.

இந்திய தலைநகரின் பிரதான இடங்களில் ஒன்றான செங்கோட்டை அடையாளச் சின்னத்திற்கு அருகில் இந்த குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All