Search

Rebecca

Nov 6, 2025

ஆரோக்கியம்

மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள்

இதயத்தின் பகுதிகளுக்கு இரத்தஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.

மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இன்மை போன்ற காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருவது வழக்கமாக உள்ளது.

பொதுவாக மாரடைப்பு ஏற்படும் முன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.

அந்த அறிகுறிகளை உணர்ந்து முன்கூட்டியே போதுமான மருத்துவ வசதி எடுத்துக்கொண்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.

அந்தவகையில், மாரடைப்பு வருவதற்கான முக்கியமான 5 அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

விரல்கள் அல்லது கால் விரல்களில் வலிமிக்க கட்டிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

உதடு வறண்டு போய் இரத்தக்கசிவு ஏற்பட்டால் இதய நோய் போன்ற கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

ஒருவரது விரல் நகங்கள் முன்பக்கமாக வளைந்து, விரல்களின் முனைப்பகுதி வீங்கி இருந்தால், இதய நோய் இருக்க வாய்ப்புள்ளது.

சருமத்தில் மஞ்சள் நிற மெழுகு போன்று ஏதேனும் வளர்ச்சியைக் கண்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகளவில் இருக்கும்.

கால்கள் மற்றும் பாதங்களில் திடீரென்று வீக்கம் உண்டானால் இதயம் சரியாக செயல்படவில்லை என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp