Search

Rebecca

Nov 14, 2025

ஆரோக்கியம்

வேர்க்கடலை குழம்பு கிராமத்து சுவையில் எப்படி செய்வது?

பொதுவாக கிராமத்து ஸ்டைலில் எது செய்தாலும் அதை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

பலரும் சைவம் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் கிராமத்து சுவையில் எது செய்தாலும் அது சுவையாக இருக்கும். அந்த வகையில் நிலக்கடலை குழம்பு கிராமத்து சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நிலக்கடலையில் புரதம், நார்ச்சத்து, மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்

வேக வைத்த வேர்க்கடலை - 1 கப்

தக்காளி

சோம்பு

தேக்காய்

எண்ணெய்

கடுகு

சின்ன வெங்காயம்

சீரகம் கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

இஞ்சி பூண்டு பேஸ்ட்

நறுக்கிய வெங்காயம்

மஞ்சள் தூள்

கரம் மசாலா தூள்

தனியா தூள்

மிளகாய் தூள்

கொத்தமல்லி

செய்யும் முறை

இந்த குழம்பு செய்ய முதலில் முதலில் தக்காளி, சின்ன வெங்காயம், சோம்பு, தேங்காய் இவற்றை பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். இதற்கு அடுத்து அரைத்த மசாலாவை சேர்க்கவும். அடுத்து எல்லா தூள் வகைகளையும் சேர்க்கவும் உப்பு போடவும்.

இப்போது வேக வைத்த வேர்க்கடலை சேர்க்கவும். கடைசியாக நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும். வேர்க்கடலை குழம்பு ரெடி. இதை வெள்ளை சாதம் சப்பாத்தி போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp