Search

Rebecca

Nov 19, 2025

ஆரோக்கியம்

சமைக்காத கோழியை எத்தனை நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்?

கோழியை குளிர்சாதன பெட்டியில் எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம் என்பதையும், அதிக நாட்கள் சேமித்து வைப்பதால் ஏற்படும் பிரச்சினை குறித்தும் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக சாப்பிடும் உணவு தான் கோழி. அதிலும் பெரும்பாலானோர் நாட்டுக்கோழியை விரும்பாமல் பிராய்லர் கோழியினையே விரும்பி சாப்பிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி கடைக்கு சென்று இறைச்சி வாங்குவதற்கு எரிச்சல் கொண்டு ஆன்லைனில் அமர்ந்த இடத்திலேயே ஆர்டர் போட்டுக் கொள்கின்றனர்.

அவ்வாறு ஆர்டர் போட்டு வாங்கும் கோழியையும் உடனே சமைக்காமல் அதனை குளிர்சாதன பெட்டியில் சில தினங்கள் சேமித்து வைக்கவும் செய்கின்றனர்.

இவ்வாறு சேமித்து வைக்கும் கோழியால் என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதையும் எத்தனை நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

நாம் வாங்கும் கோழியை 2 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம். அதிலும் உறைவிப்பானிலும் வைத்துவிட வேண்டும்.

முழு கோழி என்றால் உறைவிப்பானில் 9 முதல் 12 மாதங்கள் வரை நன்றாக இருக்குமாம். அதுவே வெட்டப்பட்ட கோழி என்றால் 6 முதல் 8 மாதங்கள் வரை நன்றாக இருக்குமாம். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் வெளியே எடுக்கக்கூடாதாம்.

ஏற்கனவே வெட்டப்பட்டு பேக் செய்யப்பட்ட கோழி என்றால் 48 மணி நேரம் கூட வைக்கக்கூடாதாம். கோழியை சேமிப்பதற்கு குளிர்சாதன பெட்டியில் தனியாக ஒரு இடம் வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

பொதுவாக கோழியை காற்று புகாதபடியான பாத்திரத்தில் வைத்து சேமிக்கவும். ஏனெனில் காற்று புகுந்தால் பாக்டீரியா தொற்று ஏற்படும். இது மற்ற காய்கறிகள், பழங்கள், பால், தயிர் இவற்றிலும் பரவிவிடும்.

குளிர்சாதன பெட்டியில் வைத்த கோழியை மீண்டும் பயன்படுத்தும் போது கழுவிய பின்பு பயன்படுத்தவும். மேலும் வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தி, மரப்பலவை, பாத்திரம் கழுவும் தொட்டி இவற்றினையும் சுத்தம் செய்துவிடவும். ஏனெனில் இதிலும் பாக்டீரியா பரவும்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்ததும் சமைத்துவிட வேண்டும். ஓரிரு மணிநேரம் வைத்தால் கோழி கெட்டுப்போய்விடும்.

மேலும் குளிர்சாதன பெட்டியில் உள்ள கோழியில் துர்நாற்றம், சாம்பல் அல்லது மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில்; சேமிக்கும் இறைச்சியினை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்தால் ஆபத்தாம். ஏனெனில் இவை ஈரப்பதத்தினை தக்கவைத்து பாக்டீரியா ஏற்பட காரணமாகின்றது. ஆதலால் கோழியை கண்ணாடி டப்பா அல்லது ஸ்டீல் பாத்திரம் இவற்றில் தான் சேமிக்க வேண்டும்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp