Search

Rebecca

Nov 7, 2025

ஆரோக்கியம்

அடிக்கடி தசை பிடிக்கிறதா? இந்த வகையான உணவை நிறுத்துங்க

அதிகமாக கால்வலி மற்றும் தசைப்பிடிப்பினால் அவதிப்படுபவர்கள் காரணம் தெரியாமல் தவிக்கும் நிலையில், கொலஸ்ட்ரால் ஒரு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக நபர் ஒருவர் நீண்ட நேரம் நடந்தாலோ, உடற்பயிற்சி மேற்கொண்டாலே, அதிக நேரம் வேலை செய்தால், நின்றாலோ கால்வலி என்பது வந்துவிடுகின்றது.

கால்வலி மட்டுமின்றி சில தருணங்களில் தசை பிடிப்பு ஏற்படவும் செய்கின்றது. ஆனால் இந்த வலியினை பொறுத்துக்கொண்டு நமது அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுகின்றோம்.

ஆனால் கால்வலி அதிகமாக இருந்தால் நமது உடம்பில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது, ரத்த நாளங்களின் உட்புற சுவர்களில் படிந்து ரத்த ஓட்டத்தினை தடை செய்யவும் செய்கின்றது. இதனை யுவாநசழளஉடநசழளளை என்று அழைக்கின்றனர்.

குறித்த பாதிப்பானது காலில் செல்லும் தமனியில் ஏற்படும் பொழுது தேவையான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் காலுக்கு கிடைப்பதில்லை. இதனால் நாளடைவில் தசைபிடிப்பு, கால் வலி போன்ற பிரச்சனை ஏற்படுகின்றது.

கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாமாயில், வெண்ணெய் இவற்றினையும் தவிர்க்கவும். பழங்கள், நட்ஸ் வகைகள், மீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி மேற்கொள்வதால் இரத்த ஓட்டம் சீராக இயங்கி, இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது. ஆதலால் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளவும். மேலும் உடற்பயிற்சி செய்வது உடலில் கெட்ட கொலஸ்ட்ரல் அளவை குறைக்கின்றது.

உடல்எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் புகைப்பிடித்தலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp