Search

Nov 22, 2025

உள்ளூர்

கடுகன்னாவ மண்சரிவு - உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன்இ மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீட்டிலிருந்தவர்களும் கடையில் இருந்தவர்களும் பாறைக்கு அடியில் சிக்கிய நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மண்சரிவில் சிக்கியுள்ள ஏனையவர்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பாரிய கல்லுடன் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All