Rebecca
Sep 9, 2025
ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய் சட்னி : செய்முறை உள்ளே...
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய காய்கறியாக கத்தரிக்காய் அறியப்படுகின்றது. கத்தரிக்காயில் ஏராளமான மருத்துவப் குணங்கள் உள்ளன. அவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
குறிப்பாக, கத்தரிக்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மற்றும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு வரபிரசாதம் என்றே கூறவேண்டும்.
கத்தரிக்காய் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது எடை மேலாண்மைக்கு பெரிதும் துணைப்புரிக்கின்றது. தொப்பையை குறைக்க வேண்டும் என போராடுபவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காய்யில் அசத்தல் சுவையில் எவ்வாறு கத்தரிக்காய் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - கால் கிலோ
நல்லெண்ணெய் - 4 தே.கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - ஒரு தே.கரண்டி
மிளகு - ஒரு தே.கரண்டி
பூண்டு -ஐந்து பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
சீரகம் - 1 மேசைக்கரண்டி
கருப்பு எள் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி
செய்முறை
முதலில் கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் ஊற போட வேண்டும்.
இதனையடுத்து புளியை கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சீரகத்தை மிதமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் எள்ளை கல் இல்லாமல் நன்றாக அரித்து எடுத்து ஈரமில்லாமல் நன்றாக வறுத்து,சீரகம், எள் இரண்டையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்டாக அரைத்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி, கடுகு, மிளகு, பூண்டு ஆகியவற்றை தட்டி போட்டு, கறிவேப்பிலையையும் அதில் சேர்த்து ஒரு நிமிடம் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் வதக்கி, அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில், கத்திரிக்காயையும் சேர்த்து மூடிபோட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் வேகவிட்டு, கத்திரிக்காய் வெந்ததும் அதில்மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்களில் பச்சை வாசனை போகும் வரையில், வதக்கிய பின்னர், கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
சட்னி நன்கு கெட்டியானதும் இறுதியாக அரைத்து வைத்த எள், சீரக பேஸ்ட்டை போட்டு நன்றாக கிளறவிட்டு, இறுதியாக கொத்தமமாலி தூவி இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆரோக்கியம் நிறைந்த கத்திரிக்காய் சட்னி தயார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All