Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

யாழ்.மண்டைதீவு படுகொலை தொடர்பில் முறைப்பாடு

யாழ்.மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணற்றுகளை அகழ்வது தொடர்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி குறித்த முறைப்பாடு நேற்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா எனும் பெண் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் எனும் ஆண் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான அனுசியா ஜெயகாந்த், தமிழ்த் தேசிய பேரவை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், திருனாவுக்கரசு சிவகுமாரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp