Oct 29, 2025
உள்ளூர்
அரச - தனியார் பேருந்து சேவையின் எதிர்காலம் குறித்து யாழ் எம்.பி க்கள் கூட்டாக ஆராய்வு !
யாழ் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகளின் எதிர்கால திட்டம் மற்றும் சவால்களை ஆராயும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து இன்று (29) கள விஜயம் மேற்கொண்டனர்.
விஜயத்தின் போது நெடுந்தூர சேவை பேருந்து நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் மத்திய பேருந்து நிலையம் பார்வையிடப்பட்டு, சேவைகள் ஒருங்கிணைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு மேம்பாடு, CCTV கேமரா நிறுவல், மலசல கூடங்கள் விரிவாக்கம், தூய்மையாக்கல் பிரச்சினைகள் தீர்வு, மற்றும் சிறு கடைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை, யாழ் மத்திய பேருந்து நிலைய அதிகாரிகள் — ஊதியங்கள் தாமதமின்றி வழங்கப்பட்டால் இணைந்த சேவையை மேற்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெங்காதரன், “தூர சேவை பேருந்து நிலையத்திலிருந்து இணைந்த சேவையை சாத்தியமாக்க நாங்கள் தயாராக உள்ளோம்; தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







