Search

Aug 27, 2025

உள்ளூர்

யாழ். மண்டைதீவு படுகொலை - 35 ஆவது ஆண்டு நினைவு நாள்.

யாழ். மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் நேற்றைய தினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.

படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலிசெலுத்தினர்.

மேலும், குறித்த பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி அகழப்பட்டு நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். என கடந்த 20ம் திகதி வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All