Search

Oct 24, 2025

உள்ளூர்

மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து IMF அழுத்தம்.

மின்சார சபையின் செலவை ஈடுசெய்வதற்காக கோரப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்களின் செலவுகளை ஈடுசெய்யும் கட்ட முறையொன்றை அமுல்படுத்தி அந்த நிறுவனங்களில் ஏற்படக்கூடிய நிதி சார் நெருக்கடி நிலைமையை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும் அந்த நிதியம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் ஓரலகு மின் உற்பத் திக்காக அந்த நிறுவனங்கள் செலவு செய்யும் நிதி மீண்டும், நுகர்வோரிடமிருந்து அறவிடப்படக்கூடிய கட்டண முறையை நடைமுறைப்படுத்தலானது சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ள நிதி வேலைத்திட்டத்தின் பிரிதான தூண் என்றும் நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்ப தற்கான மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மை யில் நிராகரித்தமை தொடர்பில் பிரதான ஊடகமொன்றுக்கு விளக்கமளிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All