Search

Oct 14, 2025

உள்ளூர்

பாடசாலை அருகில் பெருந்தொகை தோட்டாக்கள்.

தலாவ, ரத்மல்கஹவெவ வீதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலை அருகில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில், இன்று 2025 அக்டோபர் 14 அதிக அளவிலான வெற்றித் தோட்டா உறைகள் மற்றும் T-56 ரக தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தம்புத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 15,000 வெற்றித் தோட்டா உறைகள் மற்றும் பல T - 56 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட தகவலில், தோட்டாக்கள் பெரும்பாலும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவை பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவை இராணுவ அல்லது பொலிஸ் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டதற்கான தோட்டாக்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும், இந்த ஆயுதங்கள் அந்த இடத்திற்கு எப்படி வந்தன? யார் வைத்தனர்? என்பது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All