Search

Oct 4, 2025

உள்ளூர்

மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் கையளிப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம், அரசாங்கத்திடம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிகளின் உரிமைகள் நீக்கல் சட்டத்தின் படி, செப்டம்பர் 24ஆம் தேதி ஜனாதிபதி செயலாளரால் இத்தகைய அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், அதன்படி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், பாதுகாப்பு அதிகாரியின் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதால், மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அடுத்த வாரம், பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து தேவையான பாதுகாப்பு வசதிகளை கோரவுள்ளதாகவும் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All