Search

Oct 22, 2025

உள்ளூர்

தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் ரத்து.

கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை பிரதான ரயில் மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன.

- பிற்பகல் 03.35 மணிக்கு - கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை

- இரவு 08.30 மணிக்கு - கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை (இரவு தபால்)

- பிற்பகல் 03.00 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை

- பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை

- மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை (இரவு தபால்)

குறிப்பாக மலையக ரயில் பாதையில் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All