Search

Oct 28, 2025

உள்ளூர்

பல பகுதிகளில் பலத்த காற்று - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு, இடி மின்னல், வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய,தெற்கு, வடக்கு,வட - மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் மணிக்கு சுமார் 50 - 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் வட,கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக இவ் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All