Search

Oct 4, 2025

உள்ளூர்

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது.

நாடளாவிய ரீதியில் கடந்த வெள்டளிக்கிழமை (அக்டோபர் 3) நடைபெற்ற விசேட சுற்றிவளைப்பின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 14 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 631 பேரும், சந்தேகத்தின் பேரில் 21 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 276 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 173 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 23 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3835 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All