Search

Oct 4, 2025

உள்ளூர்

தெஹிவளை துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர் கைது.

தெஹிவளை ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் கொலை முயற்சி தொடர்பாக கல்கிஸ்ஸை சீவலி வீதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென்ற ஜூலை 18 ஆம் தேதி தெஹிவளை ரயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் (“ஐஸ்”), ஐந்து வாள்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All