Search

Jino

Oct 5, 2025

உள்ளூர்

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகை கடல் அட்டைகள் பறிமுதல்.

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை களை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு (4) கியூ பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப் படுத்தி வந்தனர்.

இதனை கண்ட கியூ பிரிவு போலீசார் கடல் அட்டைகளை பதப்படுத்திய கும்பலை மடக்கி பிடிப்பதற்காக சுற்றி வளைத்த நிலையில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் அங்கிருந்த மூவர் தப்பி ஓடினர்.

இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி பின்கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த குடோனில் இருந்த .இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் அட்டைகளை பயன் படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் புறநகர் பகுதியில் கடல் அட்டைகளை பதப் படுத்தி இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp