Search

Sep 9, 2025

உலகம்

சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாள அரசு

நேபாளத்தில் கடந்த வாரம் விதிக்கப்பட்ட சமூக ஊடகத் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ப்ரித்வி சுபா குருங் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை இன்று காலை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தில் உள்ள இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மண்டுவில் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து, சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All