Search

Aug 25, 2025

உலகம்

காஸா நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர் தாக்குதல்.

காஸா நகரத்தின் சில பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்களும் தாங்கிகளும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸா நகரத்தின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற திட்டமிட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்பட்டுள்ளது.

இவ் தாக்குதல் காரணமாக அங்கு வசிக்கும் ஒரு மில்லியன் பலஸ்தீனர்கள் மீது பெரும் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 64 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All