Search

Aug 22, 2025

உலகம்

இந்தியாவுடன் துணை நிற்கும் சீனா.

இந்தியாவுக்கான சீன தூதர் சூ ஃபெய்ஹோங் , அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- இது தொடர்பில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் தெரிவிக்கையில்,

"அமெரிக்கா சுதந்திர வர்த்தகத்தால் பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிடம் இருந்து வர்த்தகத்தைப் பெற வரியின் மூலமாக பேரம் பேசுகிறது.

இந்தியாவின் மீது அமெரிக்கா 50% வரை வரிகளை விதித்து அச்சுறுத்தியுள்ளது. சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது. உலக வர்த்தகத்துடன் பல்வேறு வர்த்தக அமைப்புகளை நிலைநிறுத்த இந்தியாவுடன் சீனா உறுதியாக நிற்கும். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்" என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All