Search

janani

Apr 26, 2026

உள்ளூர்

அமைதி நடைபயணத்தின் 5ஆம் நாள் இன்று..

'ஏஹிபஸ்ஸிகோ' சமாதான நடைபயணத்தின் ஐந்தாவது நாள் இன்று (26) தோலங்கமுவ தேசிய பாடசாலைக்கு அருகாமையிலிருந்து ஆரம்பமானது. இன்றைய தினம் இந்த நடைபயணம் யக்கல அபேசேகரராமய வரை சென்றடையவுள்ளது.


நாளை யக்கல அபேசேகரராமயவிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை நடைபயணம் தொடரவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபயணம் களனி விகாரையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கி நகரவுள்ளது.


அன்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள 'ஏஹிபஸ்ஸிகோ' சமாதான நடைபயணத்தின் அரச விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All