Search

admin

Mar 15, 2026

உள்ளூர்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றவர்கள் கைது....

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாக்கலை சோதனைச் சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சிவனொளிபாதமலை தரிசனத்திற்காக நேற்றும் இன்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பெருமளவிலான பக்தர்கள் வாகனங்கள் ஊடாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன்காரணமாக அந்தப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்நிலையில், நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மூவரும், இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஐவருமாக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த 'மதன மோதக' உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All