
admin
May 24, 2026
உள்ளூர்
குற்றவாளிகளுக்கு உலகமே சிறை ஆகிறது!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டஇ கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர்இ சிவப்பு அறிவித்தல் மூலம் 35 சந்தேகநபர்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சுமார் 130க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன்இ தற்போது சர்வதேச காவல்துறையினரின் உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 226 சிவப்பு அறிவித்தல்களில்இ சுமார் 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் டுபாய்இ இந்தியாஇ ரஷ்யாஇ இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பதுங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






