
Rebecca
Feb 17, 2026
உலகம்
இன்று பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்

பங்களாதேஷில் 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த 18 மாதங்கள் கழித்து கடந்த பிப்ரவரி 12 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 300 இடங்களில் 212 இடங்களைக் கைப்பற்றி தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி வெற்றி அமோக வெற்றி பெற்றது.
BNP சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கோயேஷ்வர் சந்திர ராய் மற்றும் நிதாய் ராய் சவுத்ரி ஆகிய இரண்டு இந்துத் தலைவர்களும் அடங்குவர்.
இந்நிலையில் பங்களாதேஷில் நிலவி வந்த இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் தனது பதவியை நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்கிறார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






