
janani
May 14, 2026
உலகம்
எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தில் திடீர் மாற்றம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் சற்றுமுன் உயர்வைத் தொடர்ந்து மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, West Texas Intermediate (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100.8 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.5 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் பதிவாகியுள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயு விலை 2.879 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





