Search

Dec 10, 2025

உள்ளூர்

இலங்கைக்கு ரஷ்யாவின் மனிதாபிமான உதவி!

நாட்டை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிப் பொருட்கள் 35 தொன் அளவுடன் விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கை தூதுவர் ஷோபினி குணசேகர இன்று அதிகாலை தெரிவித்துள்ளார்.

டித்வா புயலின் தாக்கம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான டித்வா புயலின் தாக்கம் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 10 சதவீதமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All