Search

Rebecca

Dec 3, 2025

உள்ளூர்

இலங்கை எதிர்கொண்ட பேரழிவுக் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கவலை தெரிவிப்பு

இலங்கை எதிர்கொண்ட பேரழிவுக் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) அவர்கள் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 02) இரவு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அவர்கள் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார்.

“திட்வா” சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகரமான சூழ்நிலை குறித்து கடந்த சில நாட்களாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்குத் தமது கவலையைத் தெரிவித்திருந்ததுடன், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All