
sasi
Jan 2, 2026
உள்ளூர்
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சுற்றுச்சூழல் சபை கூட்டம் நடைபெற்றது.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல் சபையானது பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் இன்று (02) நடைபெற்றது. இச்சபை, 2023 இன் பிறகு முதன்முறையாக நடைபெற்றது.
கடல் வளங்களை பாதுகாப்பது, மாசடைவதை தடுப்பது, இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியிலுள்ள செயல்பாடுகளின் நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை வழங்குவதன் மூலம் கடல்சார் பாரம்பரியத்தை பாதுகாத்து, நாட்டின் நீல பொருளாதார வளர்ச்சியை (Blue Economy) மேம்படுத்த திட்டமிடப்படுகிறது.
இச்சபையில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி, பிரதி அமைச்சர் என்டன் ஜெயக்கொடி, அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, தலைவர் சமந்த குணசேகர, பொது முகாமையாளர் ஜகத் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






