
sasi
Jan 2, 2026
உள்ளூர்
மின் கட்டணம் அதிகரிக்கப்டுகின்றது !

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக, இலங்கை மின்சார சபை (CEB), பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. அதில், ஆண்டின் முதல் காலாண்டில் 11.57% மின்கட்டண உயர்வு தேவையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
PUCSL வெளியிட்ட ஆவணங்களின்படி, இந்த முன்மொழிவு 2026 ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள காலப்பகுதிக்கான மின்சார கட்டணங்களை உள்ளடக்கியதாகும். இதில் உள்நாட்டு, மத வழிபாட்டு நிலையங்கள், தொழிற்துறை, வாணிபம் மற்றும் பிற நுகர்வோர் பிரிவுகளுக்கான மின்சார பயன்பாட்டு கட்டணங்களும், மாதாந்திர நிலையான கட்டணங்களிலும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவின் கீழ், உள்நாட்டு மின்சார நுகர்வோருக்கு அனைத்து பயன்பாட்டு அளவுகளிலும் (consumption blocks) ஒரு அலகு கட்டணமும் (unit rates), நிலையான கட்டணமும் (fixed charges) உயர்த்தப்பட உள்ளன.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






