
sasi
Dec 26, 2025
உள்ளூர்
கைவிடப்பட்ட காரில் T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்

ராகம, பஹலவத்தை பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மெகஸின்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி பிற்பகலில் குறித்த கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட நபர் அந்தக் காரின் சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, சிறையிலிருந்து அண்மையில் விடுதலையான ‘திக்பிடிகொட கல்ப’ என்பவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கி கொண்டு வரப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்த கொலைத் திட்டம் ‘திக்பிடிகொட லஹிரு’ என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவ நாளில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அதிகளவு ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்தியதால் அசாதாரணமாக நடந்துகொண்டதாகவும், அதனால் கொலை மேற்கொள்ளாமல் கார் மற்றும் துப்பாக்கியை அங்கு கைவிட்டு தப்பிச் சென்றதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






